Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்

Oct 11, 2026 - 12:30
0
Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்

நடிகை குஷ்பூ நேற்றைய தினம், தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

குஷ்பு
குஷ்பு

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இருக்கும் நன்மைகள், தீமைகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன.

தொழில்நுட்பம் வளரும்போது அதில் நன்மைகளும் இருக்கும், தவறுகளும் இருக்கும். அதை நாம் எந்த அளவுக்கு நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் அல்லது தவறாகத் துஷ்பிரயோகம் செய்கிறோம் என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.

இப்படித் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணம் எவ்வளவு கீழ்த்தனமானது என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

குஷ்பு
குஷ்பு

ஒருவேளை அவர்களின் வளர்ப்பும் அப்படி இருக்கலாம். திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது எந்த ஒரு பெண்ணையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரிப்பவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை இப்படி ஏ.ஐ. மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள். அதில் உங்களுக்குச் சந்தோஷம் கிடைத்தால், அதன் பிறகு மற்ற பெண்களைப் பற்றி யோசியுங்கள்" எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User