ஆஸ்திரேலியாவின் `அதிரடி' ஆட்டக்காரன் - ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்! - குட் பை மேக்ஸ்

Nov 03, 2026 - 14:00
0
ஆஸ்திரேலியாவின் `அதிரடி' ஆட்டக்காரன் -  ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்! - குட் பை மேக்ஸ்

'மேக்ஸ்வெல்' - எடுத்த முடிவு

அதிசயங்கள் நிகழ்வது மட்டுமில்லை, நிகழ்த்தவும் படும் என்பதற்கு சாட்சியாய் ,2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக "கிளேன் மேக்ஸ்வெல்" நிகழ்த்திய ஒரு மொரட்டு சம்பவம் தான் அது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் AFG vs AUS அணிகள் மோதிக்கொண்டன, 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்களை குவித்து இலக்காக வைத்தது, ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க தோல்வி தான் என்ற சூழல் நிலவிய நிலையில்,128 பந்துகளில் 201* ரன்களை குவித்து (இதில் 21 பவுண்டரிகளும்,10 சிக்சர்களும் அடங்கும்) அணியை 'தனி ஒருவனாக' வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று, மிகச்சிறந்த மீட்பை நிகழ்த்தினார் மேக்ஸ்வெல்.

Glenn Maxwell

அந்த அதிரடிக்காரன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய 'ஷாக்' தான். ஆஸ்திரேலிய அணிக்கான இவரது பங்களிப்பு மிகப்பெரியது. வழக்கத்திற்கு மாறான பேட்ஸ்மேனான இவர், தனது பிரமிக்க வைக்கும் ஷாட்கள், அதிரடியான ஆட்டத்தின் மூலம் போட்டியை வென்றும் கொடுக்கும் திறன் என்று கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

மேக்ஸ்வெலின் அதிரடி பயணம் !

மேக்ஸ்வெல்லின் சர்வதேச கிரிக்கெட் பயணம், 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் தொடங்கியது. அதே வருடம் செப்டம்பர் மாதம் துபாயில், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியிலும் களமிறங்கினார். தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

2016-ல் இலங்கைக் எதிரான டி20ஐ ஆட்டத்தில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி 65 பந்துகளில் 145*(14 பவுண்டரிகள்,9 சிக்சர்கள்) ரன்களை குவித்து ஆச்சரியப்படுத்தினார்.

Glenn Maxwell

2023-ன் ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 44 பந்துகளில் 106(9 பவுண்டரிகள்,8 சிக்சர்கள்)ரன்கள் குவித்தார்.

அதே ஓடிஐ உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 128 பந்துகளில் 201* ரன்களை எடுத்து அசாதாரண சாதனையை நிகழ்த்தினார்.

மற்றும் 2017-ல் ராஞ்சியில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 185 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தது என மேக்ஸ்வெல் நிகழ்த்திய சாதனைகளுக்கு சான்றுகளாகும்.

38 வயதான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகள், 149 ஒருநாள் போட்டிகள் மற்றும் 130 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களையும், டி20 போட்டிகளில் 2,897 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 339 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.மேலும் பவுலிங்கிலும், சர்வதேச அளவில் 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், ஆஸ்திரேலியாவின் 'ஒயிட்-பால்' அணிகளில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்துள்ளார்.

2015 டு 2023 !

அவரது விளையாட்டு வாழ்க்கையில், 2015 டு 2023 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளும், 2021-ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை வெற்றியும் அடங்கும். இருப்பினும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய அந்த அபாரமான இன்னிங்ஸ் மேக்ஸ்வெல் வாழ்க்கையின் 'ஃபயர் மொமண்ட்' என்றே சொல்லலாம். கடுமையான தசைப்பிடிப்பு இருந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மேட்சை 'அசால்டாக' டீல் செய்தது ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கே ஒரு 'மாஸ் டெம்ப்ளேட்'.

மேலும், அவரது இரட்டைச் சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆஸ்திரேலிய ஆடவர் பேட்ஸ்மேன் அடித்த முதல் இரட்டைச் சதமாகும். இது ஆஸ்திரேலியாவின் பயணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது.

Glenn Maxwell

ஆஸ்திரேலியாவின் சென்ட்ரல் காண்ட்ராக்டில்

மேக்ஸ்வெல் இடம் பெறவில்லை !

ஆஸ்திரேலியாவின் சர்வதேசத் திட்டங்களில் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு குறைந்து வருவதற்கான அறிகுறிகள் 2026-ஆம் ஆண்டில் மேலும் தெளிவாகத் தெரியத் தொடங்கின. ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட 2026-27 பருவத்திற்கான தனது தேசிய மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அவரை நீக்கியது.

அவரது நீண்டகால சர்வதேச எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவியது அதன் காரணமாகவும் அவர் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

மேக்ஸ்வெல் ஏற்கனவே ஜூன் 2025-இல் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியதே அவரது கடைசிப் போட்டியாக அமைந்தது. உடல்ரீதியான தேவைகளும், தொடர்ச்சியான காயங்களால் ஏற்பட்ட பாதிப்புகளும் அவரது இந்த முடிவைப் பாதித்தன.

மார்ச் மாத தொடக்கத்தில், டி20 போட்டிகளில் தனது எதிர்காலம் குறித்து முறைப்படியான முடிவை எடுக்கத் தயாராக இல்லை என்று மேக்ஸ்வெல் குறிப்பிட்டிருந்தார். மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட தனது உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை மதிப்பிட அவர் விரும்பினார்.

Glenn Maxwell

வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது ஓய்வுக்கு வழிவகுத்தது.

மே-ஜூன் 2026-ல் வங்காளதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியாவின் டி20ஐ அணியிலிருந்தும் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டார். தேர்வாளர்கள் ஒரு புதிய அணியைத் தேர்ந்தெடுத்தனர். இதில் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களும் புறக்கணிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் டி20 உலகக் கோப்பை சூப்பர் எய்ட்ஸ் சுற்றில் ஓமன் அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அசாதாரணமான தருணங்களையும், கஷ்ட காலங்களில் அணியை மீட்டெடுத்த ஒரு அதிரடி ஆட்டக்காரரை ஆஸ்திரேலிய அணி மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவரது ரிட்டெயர்மெண்ட் ஒரு பேரதிர்ச்சி தான்.

மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகினாலும், அவரது ஃபிரான்சைஸ் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு தனி அத்தியாயமாகவே உள்ளது. அவர் உலகெங்கிலும் உள்ள டி20 லீக்குகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார், மேலும் 2026-27 சீசன் முடியும் வரை பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் ஒப்பந்தத்தில் உள்ளார்.

அவரது இந்த முடிவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. கிரிக்கெட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.

குட் பை மேக்ஸ்..!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User