'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

Nov 03, 2026 - 10:30
0
'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி.

மோடி பேச்சு

அப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் பிறகு, அந்தச் சக்திகள் இப்போது பகிரங்கமாகவே வெளிவரத் தொடங்கிவிட்டன.

வெளிநாடுகளில் யார் யாரை ரகசியமாகச் சந்திக்கிறார்கள்? இந்திய எதிர்ப்புச் சக்திகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன? இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுபவர்கள் யார்?

மோடி
மோடி

இந்த அனைத்தையும் நாம் அடையாளம் கண்டு, ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சமூக வலைதளங்கள் ஆயுதமாக்கப்படுவது, வதந்திகள் பரப்பப்படுவது மற்றும் இந்தியாவின் பிம்பத்தைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆகியவை கவலையளிக்கின்றன.

இந்தச் சவால்களைச் சமாளிக்க நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

ராகுல் காந்தி பதிவு

மோடியின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “திரு. மோடி அவர்களே, இந்த நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள்.

நீங்கள் பிரதமர் ஆனதே வெளிநாட்டு உதவியால்தான். இப்போதும் பிரதமராக நீடிப்பதும் அதே வெளிநாட்டு உதவியால்தான்.

உங்களது நிதி அமைப்பு முழுமையாக வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும்தான் இயங்குகிறது. வெளிநாட்டுச் சமூக வலைதளங்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குகின்றன.

ராகுல் காந்தி பதிவு
ராகுல் காந்தி பதிவு

இதுகுறித்து உங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு நான் சவால் விடுகிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் விவாதிக்கத் தயார். உங்களுக்குத் தைரியம் இருந்தால் வாருங்கள்.

ஆனால் நீங்கள் வரத் துணிய மாட்டீர்கள். ஏனென்றால் உங்களைப் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை நினைத்து நீங்கள் மரண பீதியில் இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User