SCENE: 'என்னுடன் நடிக்க நஸ்ரியா 3 முறை மறுத்துவிட்டார், ஆனால்.!' - நடிகர் சூர்யா

Nov 03, 2026 - 14:00
0
SCENE: 'என்னுடன் நடிக்க நஸ்ரியா 3 முறை மறுத்துவிட்டார், ஆனால்.!' -  நடிகர் சூர்யா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene).

சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.

'சீன்' படத்தில்...
'சீன்' படத்தில்...

அந்தவகையில் நேற்று (நவ.3) தெலுங்கு ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்ட பேசிய சூர்யா, " 'The One' என்ற அடைமொழி என்பது நான் மட்டும் இல்லை நாம் அனைவரும் இணைந்த ஒன்றாகத்தான் அதைப் பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பம். எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன்.

இந்த ஆண்டு மூன்றாவது முறை படத்திற்காக மேடையில் நிற்கிறேன். இப்படம் ஒரு மர்டர், மிஸ்டரி, த்ரில்லர், நகைச்சுவை படமாக இருக்கும். நிறைய திறமையாளர்களை இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

நான் எப்போதும் நஸ்ரியாவுடன் பணியாற்ற விரும்பியிருக்கிறேன். ஏற்கனவே என்னுடைய மூன்று படங்களில் நடிக்க அவரிடம் கேட்டிருந்தோம். ஆனால் அவர் ரிஜெக்ட் செய்துவிட்டார். நான்காவது முறைதான் ஓகே சொல்லியிருக்கிறார்.

நஸ்ரியா
நஸ்ரியா

பராவாயில்லை 12 வருடங்களாக தமிழில் பல இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் அவர் நோ சொல்லியிருக்கிறார் (சிரித்துக்கொண்டே)... ஒரு வழியாக என்னுடையப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இதையெல்லாம் கடந்து ஒரு நடிகராக அவரை நான் மதிக்கிறேன். அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கை, தெளிவையும் ரசிக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User