ஆயுஷ்மான் குரானாவிற்கு குறி? - பிஷ்னோய் கேங்க் பெயரில் பாலிவுட் நடிகர்களுக்கு தொடரும் மிரட்டல்!
பாலிவுட் பிரபலங்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் உயிர்த் தப்பினார். அதன் பிறகு துஷார் கபூருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பெயரில் மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தன்னை 'ஹரி பாக்சர்' என்று அழைத்துக் கொண்ட நபர் ஒருவர், அவரிடம் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியிருந்தார்.
இருப்பினும், ஹரி பாக்சர் தொடர்புடைய முந்தைய மிரட்டல்களின் குரல் பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், மிரட்டல் விடுத்த நபர் உண்மையில் ஹார்ரி பாக்ஸர் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதிதாக பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என்று கூறிக் கொள்ளும் நபர் ஒருவரிடமிருந்து மிரட்டல் ஆடியோ செய்தி வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர், ஆயுஷ்மான் குரானாவிடம் பல கோடி ரூபாயைக் கேட்டு மிரட்டியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த அச்சுறுத்தல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபர் கூறிய அடையாளத்தைச் சரிபார்த்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த ஆடியோ செய்தியை, அதே பெயரைக் கொண்ட ஒரு நபரின் ஏற்கெனவே உள்ள ஒலிப்பதிவுகளுடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தானா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வழக்கமாக எந்த தாக்குதல் நடத்தினாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் அதனை சமூக ஊடகத்தில் தெரிவிப்பது வழக்கம் ஆகும்.
ஆனால் துஷார் கபூர் மற்றும் ஆயுஷ்மான் குரானாவிற்கு விடுத்த மிரட்டல் குறித்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சமூக ஊடகத்தில் தெரிவிக்கவில்லை. இதனால் உண்மையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இந்த மிரட்டலை விடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)