அசாமில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற நபர்; போலீஸிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றதால் என்கவுண்டர்?

Nov 04, 2026 - 14:01
0
அசாமில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற நபர்; போலீஸிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றதால் என்கவுண்டர்?

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழிலதிபர் கனகாந்தா கோகாய் என்பவர் ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பான பிரச்னையில் துப்பாக்கியால் சுட்டதில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக கோகாய் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான சட்ட நடவடிக்கை மூலம் விசாரிக்கப்படுவதற்குப் பதிலாக தங்களுக்கு உடனடி நீதி வழங்க வேண்டும் கோரினர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சிறையில் இருந்து கோகாயை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதோடு குற்றவாளியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டது.

வேறு ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோகாயை 350 கிமீ தொலைவில் உள்ள சிப்சாகருக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கோகாய்
கோகாய்

இன்று அதிகாலை 3.15 மணிக்கு போலீஸ் வாகனக் குழு கௌரிசாகரை அடைந்தபோது, ​​சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கோகாய் தெரிவித்தார். இதற்காக அவர் வாகனத்தில் இருந்து இறங்கிய பிறகு, விசாரணை அதிகாரியின் ஆயுதத்தைப் பறிக்க முயன்றார். இதனால் அந்த அதிகாரிக்கும், கோகாயிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில், மற்றொரு போலீஸ்காரர் தனது மூத்த அதிகாரியைக் காப்பாற்ற தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் கோகோய் காயம் அடைந்தார். உடனே அவர் சிப்சாகர் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் சோதித்ததில் அவர் இறந்து இருந்தார். துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்திருந்தார்.

கவுகாத்தியில் கடந்த 26ம் தேதி கோகோய் குத்தகைக்கு எடுத்த ஹோட்டல் பிலாஸ் இன் உரிமையாளர் உட்பட 6 பேரைச் சுட்டுக் கொன்றார். இதில் உரிமையாளர் ஹெலினா பரலி (58) உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User