தொழில்நுட்ப உலகில் மீண்டும் Layoff: 1,271 ஊழியர்களைப் பாதிக்கும் Canva-வின் அதிரடி மாற்றம்!
பிரபல ஆன்லைன் வடிவமைப்புத் தளமான Canva, தனது பணியமைப்பில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் 1,271 ஊழியர்கள்... நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் சுமார் 22 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை முழுவதும் பணிநீக்கம் என்று பொருளல்ல; சிலருக்கு பணிப் பொறுப்புகள் மாறலாம், சிலர் வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம், மற்றவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படலாம்.
Canva தலைமைச் செயல் அதிகாரி மெலனி பெர்கின்ஸ், நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் முதன் முறையாக மந்தமடைந்துள்ளதாக ஊழியர்களுக்கு எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட வளர்ச்சிக்காக சிறிய, விரைவாக முடிவெடுக்கக்கூடிய குழுக்களை உருவாக்கவும், நிர்வாக அடுக்குகளைக் குறைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக Product, Growth, Platform ஆகிய பிரிவுகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருகிறது. மேலும், பல தயாரிப்புக் குழுக்களின் முக்கியத் தளமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை மாற்றவும் முடிவு செய்துள்ளது.

பணியை விட்டு வெளியேறுபவர்களுக்கு குறைந்தது ஆறு மாதச் சம்பளம், சில நாடுகளில் 12 மாத மருத்துவக் காப்பீடு, வேலை தேடுவதற்கான உதவி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்குவதாக Canva கூறியுள்ளது. சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் ஊழியர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் நிதியுதவியும் வழங்கப்படும். மேலும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட MacBook-laptop ஐ-த் தங்களிடமே வைத்துக்கொள்ளலாம் என்று CEO-வின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு, செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் சூழலில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் பரந்த போக்கின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், Canva தனது அறிவிப்பில் பணியாளர் மாற்றங்களுக்கு AI-ஐ நேரடிக் காரணமாகக் குறிப்பிடவில்லை.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)