"தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் தான் காரணம்; இந்த 4 விஷயங்களை செய்தால் எல்லாம் சரியாகும்" - JD வான்ஸ்

Nov 05, 2026 - 10:32
0
"தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் தான் காரணம்; இந்த 4 விஷயங்களை செய்தால் எல்லாம் சரியாகும்" - JD வான்ஸ்

அமெரிக்காவில் நேற்று முன்தினம் (நவம்பர் 3) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் கீழ்சபை (பிரதிநிதிகளின் சபை), மேல்சபை (செனட்) இரண்டிலுமே ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இரு சபைகளிலுமே, ஜனநாயகக் கட்சி பெரும்பான்மைக்கு வேண்டிய இடங்களைத் தாண்டி லீடிங்கில் உள்ளது.

ட்ரம்ப் கட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்பது குறித்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கக் கட்சிகள் | சித்தரிப்புப் படம்
அமெரிக்கக் கட்சிகள் | சித்தரிப்புப் படம்

ஜே.டி.வான்ஸ் பதிவு

"எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த தரவு நிபுணரிடம் பேசினேன். அவர், '2024-ம் ஆண்டு ட்ரம்ப்/வான்ஸுக்கு வாக்களித்த பல வாக்காளர்கள் தற்போது கோபத்தில் இருப்பதையும், அவர்கள் எதிர்த்தரப்பிற்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பதையும் தரவுகள் காட்டுகின்றன.

நமது வாக்காளர்கள் வாக்களிக்க வருகிறார்கள். ஆனால் அவர்கள் நமக்கு வாக்களிக்காமல் போகலாம்' என்று கூறினார்.

நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்குப் பிரச்னை வாக்குப்பதிவு சதவிகிதம் அல்ல. 2024-இல் ட்ரம்ப்/வான்ஸுக்கு வாக்களித்த பலர், 2026-ல் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்ததுதான் முதன்மையான பிரச்சினை.

நான்கு பதில்கள்...

என்ன நடந்தது, ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து கட்சிக்குள் ஏராளமான விவாதங்கள் எழும்.

2024-ம் ஆண்டு ட்ரம்பிற்கு வாக்களித்த பலர் இப்போது கோபத்தில் இருப்பதையும், ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதையும் ஒரு கருத்துகணிப்பாளர் கூறினார்.

இந்த வாக்காளர்களை மீண்டும் குடியரசுக் கட்சிக்குத் திருப்ப நான்கு பதில்கள் தான் உள்ளன.

1. போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்,

2. பணவீக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்,

3. அமெரிக்காவிற்கே முதலிடம் தர வேண்டும்,

4. இஸ்ரேலுடனான நமது உறவை மாற்றியமைக்க வேண்டும்.

நமது வாக்காளர்கள் வாக்களிக்க வந்தார்கள். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட 4 காரணங்களால்தான் அவர்களில் பலர் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்துவிட்டனர்.

தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாகக் கணித்த ஒரு கருத்துக்கணிப்பாளரின் கூற்று இது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே, ஜே.டி.வான்ஸ் ஈரான் போருக்கு எதிராக தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User