Vijay: "மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது" - துரை வைகோ

May 31, 2026 - 13:02
0
Vijay: "மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது" - துரை வைகோ

"தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாகப் பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என்று திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, தவெகவிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "பெரியார், அண்ணா கொள்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

திமுக, அதிமுகவுடன் இன்னொரு திராவிட இயக்கமாகத்தான் தவெகவைப் பார்க்கிறோம்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது.

அக்கட்சி ஜாதி, மத, பண அரசியலைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது புதிய நம்பிக்கையைத் தருகிறது.

புதிய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். குறிப்பாக, காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தில் ஆட்சியை திமுக கைப்பற்றியபோது ஏற்பட்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தவெக அரசுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்ததும், கூட்டணி அரசு அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

துரை வைகோ
துரை வைகோ

மதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதைக் கூற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User