ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸிற்கு ஒதுக்கிய விஜய்! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Jun 03, 2026 - 18:01
0
ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸிற்கு ஒதுக்கிய விஜய்! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

அதிமுக சி.வி சண்முகம் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த ராஜ்ய சபா சீட்டிற்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

அந்த இடத்தை காங்கிரஸிற்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட்டை தவெக தலைவர் விஜய் ஒதுக்கியிருக்கிறார்.

தவெக விஜய் - JCD பிரபாகர்
தவெக விஜய் - JCD பிரபாகர்

இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seaf) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User