சண்டியர்: 'என் மானசீக ஆசானை நான் இயக்கப்போகிறேன், இந்தப் பயணத்தில்..!'- கமல் குறித்து அருண்குமார்

Nov 07, 2026 - 16:00
0
சண்டியர்: 'என் மானசீக ஆசானை நான் இயக்கப்போகிறேன், இந்தப் பயணத்தில்..!'- கமல் குறித்து அருண்குமார்

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் சு.அருண் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், " எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் பலவித தாக்கங்கள் இருந்துகொண்டே வந்தது. அவையனைத்தும் என்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.

சண்டியர்
சண்டியர்

சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இன்று நான் அந்த உன்னத மகா கலைஞன் கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்.

என்னை இயக்குநராகத் தேர்ந்தெடுத்து என் கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை நான் இயக்குவதோடு, இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.

கமல்ஹாசன் - அருண்குமார்
கமல்ஹாசன் - அருண்குமார்

இப்பெருங்கனவை நிஜமாக்க உதவிய பெருமதிப்பிற்குரிய அண்ணன் மகேந்திரன், பேரன்பிற்குரிய நண்பன் டிஸ்னி ஆகியோருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, நானும் எனது குழுவும் முழு கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து இந்த திரைப்படத்தை ஆகச்சிறந்த படைப்பாக சினிமா ரசிகர்களுக்கு கொடுப்போம் என்ற நம்பிக்கையை விதைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User