"உதயநிதி, நாதக பெண்ணை இரவு உடையிலேயே கைது செய்தது தவெக அரசு; ஆனால், தவெக MLA-வை..." - கனிமொழி

Nov 25, 2026 - 13:01
0
"உதயநிதி, நாதக பெண்ணை இரவு உடையிலேயே கைது செய்தது தவெக அரசு; ஆனால், தவெக MLA-வை..." - கனிமொழி

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது இன்னும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்காதது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

“எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!

எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை,

கனிமொழி பதிவு
கனிமொழி பதிவு

‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.

தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய தவெக அரசு.”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User