Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ்

Aug 09, 2026 - 12:00
0
Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’.

இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆகஸ்ட்.8) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட யஷ் நயன்தாரா குறித்து பேசியிருக்கிறார்.

 ‘டாக்ஸிக்’ படத்தில் யஷ்
‘டாக்ஸிக்’ படத்தில் யஷ்

“நயன்தாராவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி. நீங்கள் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறீர்கள். உங்களை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறீர்கள்.

உங்களுக்கான ரசிகர்கள் கூட்டம், உங்களுக்கான மார்க்கெட் என்ன என்பது குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் நடிக்கும்போது உங்களுக்கு தேதி பிரச்னைகள் இருந்தன. ஆனால், நீங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட பின் அதனை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் படத்திற்காக உங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்திருக்கிறீர்கள். படத்துக்கு நீங்கள் ஒரு பலம். உங்கள் கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடித்து கொடுத்திருக்கிறீர்கள். அவரும் என்னைப் போலதான் புரொமோஷன்களுக்கு வருவதில்லை.

யஷ்
யஷ்

அதற்கு காரணம் புரொமோஷன்களுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. நிகழ்வுகளுக்கு வந்தால் பேச வேண்டும். என்ன பேசுவது? நீங்கள் ஏற்கனவே எங்களுக்கு அன்பை வாரி வழங்கியிருக்கிறீர்கள். சில நேரங்களில் நாம் அதிகமாகப் பேசிவிடுகிறோம். இன்று நயன்தாரா இந்த நிகழ்வுக்காக வந்திருக்கிறார். அவர் தனது உள்ளத்திலிருந்து பேசியிருக்கிறார். அவருக்கு நன்றிகள்” என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User