PIN Code-ல் தேவநாகரி எண்கள்? ``மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்போம்"- சு.வெங்கடேசன்
இந்திய அஞ்சல்துறையின் அஞ்சல் குறியீட்டு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டதாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ``இந்திய அஞ்சல்துறை, அஞ்சல் குறியீட்டு எண்களாக (PIN Code) சர்வதேச அராபிக் எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்க முயற்சித்தது. இதனைக் கண்டித்து அக்டோபர் 25-ம் தேதி தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவரிடம் விளக்கம் கோரி கடிதம் எழுதியிருந்தேன். அக்கடிதத்தில் தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது அஞ்சல் துறை விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இந்திய அஞ்சல்துறை, அஞ்சல் குறியீட்டு எண்களாக (PIN Code) சர்வதேச அரபு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்க முயற்சித்ததைக் கண்டித்து கடிதம் எழுதினேன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 11, 2026
தவறை ஒப்புக்கொண்டு தனது கடிதத் தலைப்பில் (Letter pad) இருந்த இந்தி அஞ்சல் எண்களை அஞ்சல்துறைத்… pic.twitter.com/wkggrEESks
இது தொடர்பாக, தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் எனக்கு அக்டோபர் 28-ம் தேதி விளக்கம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு அனுப்பப்பட்ட 16.10.2026 தேதியிட்ட கடிதத்தை (DO letter), இந்தி மொழியில் மொழிபெயர்க்கும்போது, அனுப்புநர் முகவரியில் உள்ள அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code) தவறுதலாக தேவநாகரி எண்களில் அச்சிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய பிழைகள் ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்படும் என்று உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார். தவறை ஒப்புக்கொண்டு தனது கடிதத் தலைப்பில் (Letter pad) இருந்த இந்தி அஞ்சல் எண்களை அஞ்சல்துறைத் தலைவர் நீக்கியுள்ளார். இந்தியை மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்கும் எல்லா முயற்சிகளையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)