Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" - மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ

Nov 10, 2026 - 19:31
0
Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" - மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ

இயக்குநர் அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி தங்களின் 12-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

Atlee and Priya Atlee

இவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் 18 ஆண்டு கால நட்பு குறித்து அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "உலகம் எனது வெற்றிகளைக் கொண்டாடலாம். ஆனால், இன்று நான் எட்டியுள்ள அனைத்து உயரங்களுக்கும் உனது நிபந்தனையற்ற அன்பும், என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்தான் அடிப்படைக் காரணம் என்பது எனக்குத் தெரியும்.

ஒரு சிறுவனாக இருந்த என்னை ஒரு பொறுப்பான ஆணாகவும், கணவனாகவும், தந்தையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதனாகவும் மாற்றியிருக்கிறாய்.

Atlee & Priya Atlee
Atlee & Priya Atlee

12 வருட திருமண வாழ்க்கை மற்றும் கிட்டத்தட்ட 18 வருட நட்பு அழகானது. என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய வெற்றி எப்போதுமே நீ என் அருகில் இருப்பதுதான். நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை.

நீ இருந்தால் என்னிடம் எல்லாமே இருக்கிறது. என் சிறந்த தோழியாக, அன்பாக, பலமாக எல்லாவற்றிலுமாக இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இனிய 12-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் என் சுஜி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User