நடிகை சம்ரீன் கவுரைக் கரம்பிடிக்கும் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்; Love Proposal படங்கள் வைரல்!

Nov 11, 2026 - 20:02
0
நடிகை சம்ரீன் கவுரைக் கரம்பிடிக்கும் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்; Love Proposal படங்கள் வைரல்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் அர்ஷ்தீப் சிங் அங்கு சென்றுள்ளார்.

அவருடன் பிரபல நடிகையும் மாடலுமான சம்ரீன் கவுரும் சென்றிருக்கிறார். இந்த நிலையில், நியூஸிலாந்தில் அர்ஷ்தீப் சிங் நடிகை சம்ரீனுக்குக் காதலைத் தெரிவித்து மோதிரம் அணிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

இது தொடர்பாக அர்ஷ்தீப் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``வாழ்க்கை நமக்குக் கொடுத்த அனைத்து விஷயங்களிலும், நாம் ஒருவருக்கொருவர் கிடைத்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்நாள் முழுமைக்குமான பயணத்திற்கு... 11.11.2026" என்ற நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 26 அன்று சம்ரீனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "My Person" எனப் பதிவிட்டு, தங்கள் காதலை அர்ஷ்தீப் சிங் முறைப்படி வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

யார் இந்த சம்ரீன் கவுர்?

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சம்ரீன் கவுர் நடிகை, மாடல் மற்றும் சமூக வலைதளப் பிரபலம் ஆவார். 2018-ம் ஆண்டின் 'ஃபெமினா மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் சார்பில் பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறியவர்.

தொடர்ந்து '83' திரைப்படம், 'நெயில் பாலிஷ்' தொடர் மற்றும் பஞ்சாபி திரைப்படமான 'சர்தார் ஜி 2' ஆகியவற்றில் நடித்துள்ளார். மேலும் குரு ரந்தவா, பாட்ஷா மற்றும் ஜூபின் நௌதியால் போன்ற பிரபல பாடகர்களின் ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User