திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றவில்லை என்றால் விஜய்யை கிறிஸ்துவராகத்தான் பார்க்க முடியும்" - நயினார்
'கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ.24) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. கூடவே கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், '150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறையை மாற்றுவது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்' என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனிடையே திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், " திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தின் முதலமைச்சர் தீபம் ஏற்றவில்லை என்றால் முழுக்க முழுக்க அவரை ஒரு கிறிஸ்துவராகத்தான் பார்க்க முடியும்.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் முதல்வராக இருப்பார். நிர்வாகத்தைச் சரியாக வழிநடத்தத் தெரியவில்லை என்றுதான் கருத முடியும். திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு பதற்றம் தேவையே இல்லை. தீபம் ஏற்றுவோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று சொல்லிவிட்டாலே போதும். இன்று தீபம் ஏற்றுகிறார்களா? இல்லையா? என்பதைப் பார்ப்பதற்காக இன்று மதியம் திருப்பரங்குன்றம் செல்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)