"துரைமுருகனுக்கு பாராட்டுக்கள்; ஜோசப் விஜய்னு நான் சொன்னப்போ தப்பா நினைச்சீங்க, இப்போ.!" - ஹெச்.ராஜா

Nov 05, 2026 - 10:32
0
"துரைமுருகனுக்கு பாராட்டுக்கள்; ஜோசப் விஜய்னு நான் சொன்னப்போ தப்பா நினைச்சீங்க, இப்போ.!" - ஹெச்.ராஜா

வேலூரில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

" தமிழகத்தில் இந்துக்களை நாங்கள் அடிமைப்படுத்திவிட்டோம் என்று சில கட்சிகள் மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்து கோயில்களில் இந்து மத அடையாளத்தோடு அதாவது விபூதி வைத்துக்கொண்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும், அவர் எந்த மாதமாக இருந்தாலும் சரி... இந்து மதத்தை அரசாங்கம் அழித்துவிட்டோம் என்று அரசாங்கம் நினைத்தால் அது தவறு.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நடந்து முடிந்த தேர்தலில் ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருக்கிறார். அவரை நான் முதன்முதலில் ஜோசப் விஜய் என சொன்னதற்கு நீங்கள் எல்லாம் என்னை, மத கண்ணோட்டத்தில் பார்க்கிற மாதிரி சொன்னீர்கள். ஆனால், இப்போது உண்மை தெரிந்துவிட்டது. இந்த நிர்வாகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல விழாவில் வேதமந்திரங்கள் முழங்கத் திருமணம் நடைபெற்றதற்கு குறித்து பேசிய அவர், "திமுக பொதுச்செயலாளர் இல்ல திருமண விழாவில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்துள்ளது. இது புதிதல்ல.

துரைமுருகன்
துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம்

திமுகவில் உள்ள தலைவர்கள் அவர்கள் வீட்டில் இந்து முறைப்படி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்கள். பிறகு ஸ்டாலினை அழைத்து வந்து ஷோ காட்டுவது என்பது பழக்கம் தான். ஓட்டுக்கு பயந்து இந்து வேஷம் போட்டாலும் சரி, அல்லது உள் மனதில் இருந்து இந்து வேஷம் போட்டாலும் சரி துரைமுருகனுக்கு எனது பாராட்டுக்கள்’’ என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User