மது விருந்து... அம்மிக்கல் ஆயுதம்; மனைவி உட்பட 7 பேரை சினிமா பாணியில் கொன்று புதைத்த டாக்ஸி டிரைவர்!
பெங்களூருவில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் இந்து சேகர். இவரது மனைவி சுனிதா. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களது பிரச்னையை தீர்த்து வைக்க உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. சுனிதா தனது பெற்றோர் வீட்டுடன் தொடர்பில் இருப்பது சேகருக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மனைவியை சேகர் அம்மிக்கல்லால் தலையில் அடித்து கொலை செய்தார். உடலை பெங்களூருக்கு வெளியில் இருக்கும் நந்தி ஹில் பகுதியில் அடக்கம் செய்துவிட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக தனது மனைவி பிக்னிக் சென்று இருப்பதாக தெரிவித்தார். அடுத்த நாள் சேகர் தனது மனைவியின் சகோதரர்கள் சிவக்குமார் மற்றும் சங்கரை தனது வீட்டு விருந்துக்கு அழைத்தார்.

அவர்களுக்கு மது விருந்து கொடுத்து அம்மிக்கல்லால் தலையில் அடித்து கொலை செய்தார்.
அதோடு அவர்களின் மனைவிகளான நளினி மற்றும் திவ்யா ஆகியோரையும், சங்கரின் 7 வயது மகனையும் கொலை செய்தார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்து படுகொலை செய்து உடலை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்துள்ளார். கொலைக்குப் பிறகு, இந்து சேகர் ரத்தக் கறைகளை அகற்ற வீட்டைச் சுத்தம் செய்துள்ளார். அதோடு கொலைக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் அம்மிக் கல்லைக் கழுவ ரசாயனங்களைப் பயன்படுத்தினார்.
கல் மற்றும் சடலங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நளினியின் தாயார் தனது மகளை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்துசேகர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டை சோதித்தபோது அங்கு கொலைக்கான தடயம் கிடைத்தது. அதன் மூலம் இந்து சேகரிடம் விசாரித்ததில் 7 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
உடனே உடலை மறைத்ததாக கருதப்படும் நந்தி ஹில் பகுதிக்கு இந்து சேகரை அழைத்து சென்றனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் 7 வயது சிறுவனின் உடல் மட்டும் கிடைத்தது. எஞ்சியவர்களின் உடலை தேடி வருகின்றனர். இறந்தவர்கள் உடலை வெளியில் எடுத்துச்சென்று மறைக்க வேறு யாராவது உதவி செய்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இக்கொலை துரதிஷ்டவசமானது என்று கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் மனைவி தரப்பில் தன்னை அவமானப்படுத்தியதால் இக்கொலையை செய்ததாக இந்து சேகர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)