ராதிகா, ரேவதி, ரேகா, ராதா! - பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளின் 'ர' சென்டிமென்ட்!

Jun 10, 2026 - 14:01
0
ராதிகா, ரேவதி, ரேகா, ராதா! - பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளின் 'ர' சென்டிமென்ட்!

தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

கோலிவுட்டில் '16 வயதினிலே' மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என வரிசையாக பிளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்திருக்கிறார்.

இவரது திரைப்படங்கள் மட்டும் ஸ்பெஷலானது அல்ல. பாரதிராஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்களுக்கு தமிழ் திரையுலகில் ஸ்பெஷல் உண்டு.

நடிகைகள் ராதிகா, ராதா, ரேவதி, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி ஆகியோர் பாரதிராஜாவின் அறிமுகங்கள் தான்.

திரையுலகிற்காக நிஜப் பெயரை மாற்றும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு.

பாரதிராஜா
பாரதிராஜா

அப்படி பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளுக்கு அவரது சாய்ஸ் 'ர' வரிசையே. அதாவது, அவர் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு அவர் 'ர' வரிசையில் இருந்து தான் பெயர்களை தேர்ந்தெடுப்பார்.

ராதிகா (கிழக்கே போகும் ரயில்),

ராதா (அலைகள் ஓய்வதில்லை),

ரேவதி (மண்வாசனை)

ரேகா (கடலோர கவிதைகள்)

ரஞ்சிதா (நாடோடி தென்றல்)

பாரதிராஜாவிற்கு 'ர' வரிசையில் சென்டிமென்ட் இருந்திருக்கலாம் என்பது தான் நடிகைகளின் பெயருக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User