வெள்ளை மாளிகைக்குள் செய்தி நிறுவனங்கள் தடை: "இரும்புத் திரை" - அமெரிக்காவைச் சாடும் ஈரான்
CNN, MS NOW, Politico ஆகிய மூன்று அமெரிக்கச் செய்தி நிறுவனங்களையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் சென்று செய்தி சேகரிக்கத் தடை விதித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த நகர்வை எதிர்த்து இந்த மூன்று செய்தி நிறுவனங்களும் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றன.
மேலும், அமெரிக்காவின் முக்கியச் செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகை கவரேஜைத் தவிர்த்து வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “ஒரு நிர்வாகம் தன் கதவுகளை இறுக மூடிக்கொண்டு, தனக்குப் பிடிக்காத அமெரிக்கச் செய்தியாளர்களையும்,

தான் அமைதிப்படுத்த நினைக்கும் ஈரான் அதிபரின் ஊடகக் குழுயும் வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும்போது...
அது வெறும் அணுகல் உரிமையை மட்டும் கட்டுப்படுத்தவில்லை. இதன் மூலம் தகவல்களைப் பெறுவதற்கான உரிமையைப் பறிப்பதும், உண்மையை மறைக்கவும் தன் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கவும் முயல்கிறது.
ஒரு காலத்தில் ‘இரும்புத் திரையை’ உடைத்தெறிந்ததற்காகப் பெருமைப்பட்ட ஒரு நாடு...
இன்று தனக்குத்தானே அமைத்துக்கொண்ட இரும்புத் திரைக்குப் பின்னால் போய் நின்றுகொண்டிருக்கிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செய்கையைச் சாடும் பதிவு ஆகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)