விவசாய சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை ! - எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

Aug 08, 2026 - 10:02
0
விவசாய சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை ! - எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

காவிரி மற்றும் குறுவை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள முன்னிலையில் விவசாய சங்கங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டன்

அமைச்சர் ஆனந்த் தலைமையில நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், காந்திராஜ், வினோத், சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, லதா, ராமச்சந்திரன் ஆகியோருடன்,

விவசாய அமைப்புகள் சார்பில் ஈசன் முருகசாமி, ரவீந்திரன், சுரேஷ்குமார், அய்யாகண்ணு, பாண்டியன், ஸ்ரீனிவாசன், தட்சணாமூர்த்தி, திருஞானசம்பந்தன், அய்யனார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துதல், விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் தகுதி நிபந்தனைகளை திருத்துதல், குத்தகை விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், 100 நாள் வேலை உறுதியளிப்புத்திட்டம், குறுவை மற்றும் சம்பா பாதிப்பை கருத்தில் கொண்டு 100 சதவிகிதம் பயிர்க்கடன் தள்ளுபடி செயதல், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துதல், பழைய மற்றும் நிலுவையிலுள்ள பயிர் கடன்களுக்கு தள்ளுபடி வழங்குதல், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் முழுமையான பயன்பாடு, நேரடி கொள்முதல் நிலைய மேம்பாடு, கரும்பு சாகுபடி ஊக்குவிப்பு, சர்க்கரை ஆலை மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாகுபாடின்றி அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ 3500, கரும்பு டன்னுக்கு ரூ 4500 விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். இக்கோரிக்கைகள் அடிப்படையில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இதற்கான நல்ல முடிவை சட்டமன்றத்தில் அறிவிக்க செய்வோம் என்று அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்துள்ளார்கள். மேகதாது குறித்து உரிய நேரத்தில் தேவைப்படும்பட்சத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User