மே.வங்கம்: வேலிக்கு கீழே குழி தோண்டி 3வது முறையாக தப்பி, சொந்த ஊரான அஸ்ஸாம் நோக்கி செல்லும் புலி

Nov 09, 2026 - 16:30
0
மே.வங்கம்: வேலிக்கு கீழே குழி தோண்டி 3வது முறையாக தப்பி, சொந்த ஊரான அஸ்ஸாம் நோக்கி செல்லும் புலி

அஸ்ஸாம் மாநிலத்தின் ராய்மோனா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூன்று வயது பெண் புலி மேற்கு வங்கத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடிவிட்டது. அந்த காப்பகத்தில் 2.2 ஹெக்டேர் கம்பி வேலி அமைக்கப்பட்ட இடத்தில் புலி அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து வேலிக்கு கீழே குழி தோண்டி தப்பியோடிவிட்டது. ஏற்கனவே அந்த புலி இரண்டு முறை அங்கிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்கு சென்றது. அங்கிருந்து மூன்றாவது முறையாக பிடித்து வந்து அடைத்து இருந்தனர்.

தற்போது அந்தப் பெண் புலி முள்வேலியின் அடியில் ஒரு குழி தோண்டி அதன் வழியாக வெளியில் தப்பிச்சென்று இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. புலிகள் பொதுவாக தோண்டும் பழக்கம் கொண்டவை அல்ல என்பதால், இது வேலியின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் தரம் குறித்து கடுமையான கேள்வி எழுந்துள்ளது.

மயக்க ஊசி செலுத்தி கொண்டு வரப்பட்ட புலி

அந்த புலி மூன்றாவது முறையாக தப்பிச்சென்ற போது அதற்கு மயக்க மருந்து செலுத்தி பக்ஸாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட நான்கே நாட்களில் மீண்டும் தப்பித்து சென்று இருக்கிறது.

வெறும் 34 நாட்களில் அந்த புலிக்கு மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து இருக்கின்றனர். அந்த புலிக்கு சிப் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அது தற்போது பாலா ஆற்றை கடந்து பக்ஸா காட்டின் வழியாக கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனது முந்தைய பயணத்தை அது அப்படியே மீண்டும் தொடர வேண்டுமானால், ஜெயந்தி ஆறு மற்றும் ராய்டக் ஆறுகளை கடக்கவேண்டும். மேற்கு வங்கத்திற்கும் அசாமிற்கும் இடையிலான புவியியல் எல்லையாக இருக்கும் சந்தோஷ் ஆறு தான் அதன் அடுத்த முக்கிய இலக்காகும்.
சங்கோஷ் ஆற்றைக் கடந்தவுடன், இரண்டு பாதைகளை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழையலாம். அஸ்ஸாம்

மாநிலத்தின் உட்பகுதிக்குள் மேலும் நகர்ந்து, ஏற்கனவே அது பிடிபட்ட ராய்மோனா தேசிய பூங்கா பகுதியை நோக்கி செல்லலாம் என்று விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், புலி வேலிக்கு அடியில் குழி தோண்டி தப்பிப்பது சாத்தியம்தான். வேலியின் அடித்தளம் சரியாக அமைக்கப்படாவிட்டால் இதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாய் போன்று புலி குழி தோண்டக்கூடியது கிடையாது''என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User