"ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன்" - கேன் வில்லியம்சன்

Nov 10, 2026 - 12:30
0
"ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன்" - கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து 'Between Two Beers' பாட்காஸ்டில் பேசிய கேன் வில்லியம்சன், "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன். நாங்கள் இருவரும் கிரிக்கெட்டில் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

அப்போது கண்ணாடியில் என்னையே பார்ப்பது போல் இருந்தது. அவருடன் பேசி முடித்துவிட்டு, என் மனைவியிடம் 'ஓய்வு பெற இதுவே சரியான நேரம்' என்று கூறினேன்” என்று பகிர்ந்திருக்கிறார்.

நியூசிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக கேன் வில்லியம்சன் கடந்த ஜூன் மாதம் ஓய்வை அறிவித்தார். இதுவரை 48 சதங்கள் மற்றும் ஆறு இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ரன்களைக் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User