தீபாவளி காற்று மாசுபாடு: ``பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission" - பூவுலகின் நண்பர்கள்

Nov 10, 2026 - 10:30
0
தீபாவளி காற்று மாசுபாடு: ``பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission" - பூவுலகின் நண்பர்கள்

இந்தியா முழுவது தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதேநேரம், வாணவேடிக்கை, பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களால் காற்று மாசு முந்தையை ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் தகவலில், ``முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் சராசரியாக காற்று மாசுபாடு அதிகரித்திருப்பது மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைச் சொல்ல அறிக்கைகள் தேவையில்லை.

பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission என்பதை அனைவரும் உணர வேண்டும். மாநிலத்திலேயே சென்னையில் (வளசரவாக்கத்தில் AQI 343) காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது என TNPCB தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளின் காற்று தரக் குறியீடு சராசரியுடன் ஒப்பீட்டால் 2026ல் காற்று மாசுபாடு அதிகரிதுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், அதனுடன் இணைக்கப்பட்டப் பதிவில், ``தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் உள்ள 39 கண்காணிப்பு மையங்களில் 2024, 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளுக்கான காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவுகளின் ஒப்பீட்டு பகுப்பாய்வு, 2026-ம் ஆண்டிலும் காற்றுத் தரக் குறியீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 2024-ல் 143.46 ஆக இருந்து, 2025-ல் 161.69 ஆக உயர்ந்து, 2026-ல் மேலும் 168.97 ஆக அதிகரித்துள்ளது. இது 2025 உடன் ஒப்பிடும்போது 2026-ம் ஆண்டில் தோராயமாக 4.50% உயர்வாகும். 39 கண்காணிப்பு மையங்களில், 2025 உடன் ஒப்பிடுகையில் 2026-ல் 25 மையங்களில் காற்றுத் தரக் குறியீடு அதிகரிப்பையும், 14 மையங்களில் குறைவையும் பதிவிட்டுள்ளன.

காற்று தரக்கட்டுப்பாட்டு அறிக்கை - 2026
காற்று தரக்கட்டுப்பாட்டு அறிக்கை - 2026

சென்னை தொடர்ந்து ஒப்பீட்டளவில் அதிக அளவிலான காற்றுத் தரக் குறியீட்டைப் பதிவு செய்துள்ளது. 2026-ம் ஆண்டில் நுங்கம்பாக்கம் (332), வளசரவாக்கம் (343), சௌகார்பேட்டை (311) மற்றும் தி. நகர் (306) ஆகிய பகுதிகள் 'மிகவும் மோசம்' (Very Poor) என்ற பிரிவின் கீழ் வந்துள்ளன. இருப்பினும், 2025 உடன் ஒப்பிடும்போது 2026-ல் திருவொற்றியூர், கடலூர், வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றம் காணப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User