ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை - டிஎன்ஏ சோதனையில் உறுதி?

Mar 30, 2026 - 18:32
 0
ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை - டிஎன்ஏ சோதனையில் உறுதி?

ந‌டிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும், அந்த பந்தத்தின் மூலம் தனக்குக் குழந்தை பிறந்ததும், சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் மகளிர் ஆணையம், நீதிமன்றம் என பல இடங்களில் புகார் தெரிவித்திருந்தார் அவரிடம் காஸ்ட்யூம் டிசைனராக இருந்த ஜாய் கிறிசில்டா.

மகளிர் ஆணையத்தில் ஜாய்க்கு ஆதரவாக தீர்ப்பு வர, 'நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' என்றார் ரங்கராஜ்.

நீதிமன்றத்தில் அடுத்தடுத்த கட்ட விசாரணைகளுக்குப் பிறகு டி்.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மாதம்பட்டி ரங்கராஜ் -  ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா

அப்போது ரங்கராஜை, டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவை அறிவித்த நீதிபதி, ஜாய் கிறிசில்டாவின் குழந்தைக்கு அப்பா ரங்கராஜ்தான் என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக அறிவித்திருக்கிறாராம்.

மேற்கொண்டு வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கைப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ரங்கராஜ் ஜாய் இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் பேசிய போது,

'ஜாய் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்தக் குழந்தைக்கு ரங்கராஜ் தரப்பில் செய்ய வேண்டியதை செய்யச் சொல்லி உத்தரவிடப்படலாம். எனினும் அடுத்த கட்ட விசாரணைக்கு முன், இரு தரப்பு மத்தியஸ்தர் முன் தீர்வு குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படுமென தெரிகிறது' என்கிறார்கள்.

ஜாய் கிறிசில்டா
ஜாய் கிறிசில்டா

ஜாய் கிறிசில்டா தரப்பில் நம்மிடம் இந்த தகவலை உறுதி செய்திருக்கும் நிலையில், ரங்கராஜிடம் இது தொடர்பாக கேட்க தொடர்பு கொண்டோம்.

அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ் அப்பில், இது தொடர்பாக பேசக் கேட்டும் அவர் பதில் அளிக்கவில்லை.

ரங்கராஜ் பேசும்பட்சத்தில் அவர் தரப்பு விளக்கத்தையும் பதிவிட தயாராக் இருக்கிறோம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0