"மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல" - பகிரும் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன்

Apr 22, 2026 - 21:02
 0
"மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல" - பகிரும் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மைக்கேல்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

மைக்கேல் ஜாக்சனாக அவரது அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் நடித்திருக்கிறார்.

Micheal Jackson Biopic
Micheal Jackson Biopic

அந்தோணி ஃபுகுவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளைக் கற்றுக்கொண்டபோது தான் சந்தித்த சவால்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் அவர், "மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல, அது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு தாளமும் துல்லியமாகப் பொருந்த வேண்டும்.

அதைச் செய்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவரது கால்களின் வேகமும், அதே சமயம் உடல் மொழியில் இருக்கும் அந்த நளினமும் ஒரே நேரத்தில் வருவதுதான் கடினம்.

Micheal Movie
Micheal Movie

குறிப்பாக, மிக வேகமான பீட்களுக்கு ஏற்ப உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அசைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது.

ஒவ்வொரு பீட்டையும் மிகச் சரியாகப் பிடிக்க வேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது," என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0