CSK: 'சோதனை மேல் சோதனை'; காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே!

Apr 21, 2026 - 21:03
 0
CSK: 'சோதனை மேல் சோதனை'; காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த சீசன் முழுக்கவே நல்ல பெர்பாமென்ஸைச் சிஎஸ்கே-வின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கடந்த போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது.

பேட்டிங்கில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது அவருக்கு இடது காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. அதன் பின்னரும் அவர் தொடர்ந்து விளையாட முயன்று ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் மாத்ரேவின் காயத்தைப் பரிசோதித்த மருத்துவக் குழு, அவர் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் எனத் தெரிவித்திருக்கிறது. இதனால், இந்த ஐபிஎல் சீசனின் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட முடியாது என்பதை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

18 வயதே ஆன ஆயுஷ் மாத்ரே, இந்தச் சீசனில் சிஎஸ்கே அணிக்கு முக்கியப் பலமாக இருந்தார்.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 201 ரன்களைக் குவித்திருக்கிறார். அவர் இல்லாதது அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக இருக்கும் என்பது ரசிகர்களின் வருத்தமாகவும் இருக்கிறது.

Ayush Mhatre
Ayush Mhatre

இந்தச் சீசனில் சிஎஸ்கே அணி ஏற்கெனவே பல காயப் பிரச்னைகளால் தத்தளிக்கிறது. தோனி தசைப்பிடிப்பு காரணமாக விலகி இருக்கிறார்.

கலீல் அகமதும் தசை கிழிவு காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். தற்போது ஆயுஷ் மாத்ரேவும் விலகியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0