Locker Loop: சட்டையின் பின்னே இருக்கும் ‘லாக்கர் லூப்’ எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 8

Mar 31, 2026 - 09:30
 0
Locker Loop:  சட்டையின் பின்னே இருக்கும் ‘லாக்கர் லூப்’ எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 8

உங்கள் ஃபார்மல் சட்டைகளின் பின்பக்கம், காலருக்கு கீழே ஒரு சிறிய துணி வளையத்தைப் பார்த்திருப்பீர்கள். 'லாக்கர் லூப்' (Locker Loop) என்று அழைக்கப்படும் இதற்குப் பின்னால் ஒரு காதல் கதையே இருக்கிறது!

Locker Loop
Locker Loop

கடலில் பிறந்த ஐடியா:

இதன் தொடக்கம் அமெரிக்கக் கடற்படை மாலுமிகளிடம் இருந்து ஆரம்பித்தது. கப்பல்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அலமாரிகளோ ஹேங்கர்களோ இருக்காது. எனவே, மாலுமிகள் தங்கள் சீருடைகளைக் கசங்காமல் ஆணியில் மாட்டி வைப்பதற்காகவே இந்த லூப் உருவாக்கப்பட்டது.

பெயர் வந்த கதை:

1950-60களில் கேண்ட் (Gant) நிறுவனம் கல்லூரி மாணவர்களுக்கான சட்டைகளில் இதை அறிமுகப்படுத்தியது. மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் உள்ள ஜிம் லாக்கர்களில் (Gym Lockers) சட்டையை எளிதாக மாட்ட இது உதவியது. இதனாலேயே 'லாக்கர் லூப்' என்ற பெயர் நிலைத்தது.

Locker Loop
Locker Loop

காதல் சின்னமான லூப்:

1960-களில் பல்கலைக்கழக மாணவர்களிடையே இது ஒரு ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் குறியீடாகவே மாறியது! ஒரு மாணவன் காதலில் விழுந்துவிட்டால், தான் 'சிங்கிள்' இல்லை என்பதைக் காட்ட தனது சட்டையில் உள்ள லூப்பை வெட்டி விடுவார். அதேபோல், ஒரு பெண்ணுக்கு ஒரு மாணவனைப் பிடித்திருந்தால், விளையாட்டாக அந்த லூப்பைப் பிடித்து இழுத்து அறுக்கும் வழக்கமும் அப்போது இருந்தது. பல நேரங்களில் இதனால் சட்டைகளே கிழிந்து போவதும் உண்டு!

Locker Loop
Locker Loop

இன்று இதன் நிலை:

இன்று ஹேங்கர்கள் வந்துவிட்டதால் இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. இருப்பினும், ஒரு பாரம்பர்ய அடையாளத்திற்காகவும் (Heritage look), சில பிராண்டுகள் விலைப்பட்டியலை (Tag) மாட்டுவதற்கும் இதைப் பயன்படுத்துகின்றன.

சின்னஞ்சிறு துணி வளையத்திற்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருப்பது ஆச்சரியம் தானே!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0