"கடமை இரண்டு திசைகளில் அழைக்கிறது; சென்னை செல்கிறேன், இதனால்.!" - மாணிக்கம் தாகூர்

Jul 23, 2026 - 10:30
0
"கடமை இரண்டு திசைகளில் அழைக்கிறது; சென்னை செல்கிறேன், இதனால்.!" - மாணிக்கம் தாகூர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கலந்து வந்தார்.

இன்று அவர் சென்னை வரும் சூழலில், அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர்.

"இன்று என் கடமை இரண்டு திசைகளில் என்னை அழைக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) தலைவர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைப்பதற்காக சென்னை செல்கிறேன்.

காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் போராட்டம்

ஆகஸ்ட் 1, 2026 வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாம், கட்சியை அடித்தளத்தில் மேலும் வலுப்படுத்தும் முக்கியமான பணியாகும்.

இதன் காரணமாக இன்று நாடாளுமன்றத்திலும், நடைபெறும் போராட்டத்திலும் என்னால் பங்கேற்க முடியவில்லை.

ஆனால், எங்கள் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை; எந்த சமரசமும் இல்லை.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

NEET-UG 2026 வினாத்தாள் கசிவு, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது. அமைச்சரின் மௌனமோ, மத்திய அரசின் தப்பிக்கும் முயற்சிகளோ, இந்த மாபெரும் துரோகத்தை மறைக்க முடியாது.

மாணவர்களின் எதிர்காலம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நீதி கிடைக்கும் வரை, பொறுப்புக்கூறல் ஏற்படும் வரை, எங்கள் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்". என்றிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User