`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' - லயோலா மணி!

Nov 02, 2026 - 12:30
0
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' - லயோலா மணி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை தாம் அசைவ உணவை உட்கொள்ளப் போவதில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியேற்றுள்ளதாகத் லயோலா மணி தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜ் மோகன், லயோலா மணி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டர். அப்போது பேசிய பள்ளி பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ``திரைப்பட இயக்குநர் விக்ரமன், அரசுப் பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

விஜய் ராஜ் மோகன்
விஜய் ராஜ் மோகன்

இந்த மேடையில் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடக்கூடியவர். இருப்பினும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தைக் தளபதி தலைவர் எந்நாளில் முறைப்படி தொடங்கி வைக்கிறாரோ, அதுவரை தாம் அசைவ உணவைத் தொடப் போவதில்லை என்ற தீவிர முடிவில் இருக்கிறார். தற்போது வரை அவர் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User