Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Apr 27, 2026 - 07:32
 0
Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்குமே தினமும் எந்த உணவாக இருந்தாலும் கூடவே உருளைக்கிழங்கு இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். 'தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடும். கொடுக்காதே...' என்கிறார் என் அம்மா. என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, குழந்தைகள் உள்ள பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவிகித உணவுகளைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வெறும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்குப் பிற காய்கறிகளின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துகள் உடலில் சேராது. 

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம்.

உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக்கொடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது.  ஃப்ரென்ச் ஃப்ரைஸைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதில் உருளைக்கிழங்கை வேகவைத்து அதை கட்லெட் போல செய்து கொடுக்கலாம்.

நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது. ஃப்ரென்ச் ஃப்ரைஸை தவிர்த்துவிடுவது நல்லது.

உருளைக்கிழங்கை விரும்பும் குழந்தைகளுக்கு அதை ஒரேயடியாகத் தவிர்க்காமல் சமையலில் சின்னச் சின்ன மாறுதல்களைப் பின்பற்றி பேலன்ஸ் செய்யலாம். உதாரணத்துக்கு, ஸ்டஃப்டு சப்பாத்தி செய்துகொடுக்கலாம்.

அதில் உருளைக்கிழங்குடன் வெந்தயக்கீரையோ அல்லது காய்கறிகளோ கலந்து செய்து கொடுக்கலாம். உருளைக்கிழங்குடன் இப்படி காய்கறிகள், கீரைகள் கலந்து கொடுத்து பழக்கும்போது உருளைக்கிழங்கின் சுவை இருக்கும் திருப்தியில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

மற்ற காய்கறிகளும் சாப்பிட்டால்தான் உருளைக்கிழங்கு செய்து கொடுப்பதாகச் சொல்லுங்கள். குழந்தைகள் மெள்ள மெள்ள மாறுவார்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0