Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" - காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர்

Nov 11, 2026 - 15:01
0
Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" - காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர்

நடிகை பிரியா பவானி சங்கருக்கும், அவருடைய நீண்ட நாள் காதலரான ராஜ்வேலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar - Rajavel
Priya Bhavani Shankar - Rajavel

'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இன்று டோலிவுட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ரவிதேஜாவுடன் அவர் நடித்திருந்த 'இருமுடி' திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அவரும், ராஜ்வேல் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருகிறார்கள். அவரைப் பற்றி சில பேட்டிகளிலும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இவர்களுக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இன்று இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Priya Bhavani Shankar - Rajavel
Priya Bhavani Shankar - Rajavel

சென்னையில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களுக்கு இன்று திருமணம் நடந்திருக்கிறது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரியா பவானி சங்கருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் 'டிமாண்டி காலனி 3' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அத்தோடு அவர் நடித்திருக்கும் 'மரகத நாணயம் 2' படத்தின் வேலைகளும் நடைபெற்றுவருகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User