"அரசியலமைப்பு எனக்குச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்..!" - அருணா ராய் | Aval Awards

Nov 26, 2026 - 19:30
0
"அரசியலமைப்பு எனக்குச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்..!" - அருணா ராய் | Aval Awards

'அவள் ஆளுமை' விருதை அருணா ராய்-க்கு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி வழங்கி சிறப்பித்தார்.

`அவள் ஆளுமை’ விருதைப் பெற்றுக்கொண்ட அருணா ராய் நிறுத்தி, நிதானமாகப் பேசினார்... ``இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஏனெனில், இது என் தனிப்பட்ட சாதனை அல்ல. சமூக ஆர்வலர் யாரும் தனியாக, எதையும் சாதிப்பதில்லை.

எனது சக ஆர்வலர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்தும், தகவல் அறியும் உரிமை (RTI) இயக்கத்திலிருந்தும் பலர் இங்கே வந்திருக்கின்றனர்.

'அவள் ஆளுமை' விருதைப் பெற்றார் அருணாராய்!
'அவள் ஆளுமை' விருதைப் பெற்றார் அருணாராய்!

நீங்கள் அனைவரும் இணைந்தே RTI-ஐ சாத்தியமாக்கினீர்கள். இன்று இந்தியாவில் சுமார் 60 லட்சம் RTI பயனர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.

எனவே, இது எனக்கு மட்டும் உரியதல்ல. நூற்றுக்கணக்கான பெண்களின் சார்பாக நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு மிக்க நன்றி கூறுகிறேன்.

இன்று அரசியலமைப்பு தினம். இன்றைய இந்தியாவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களையும், குறிப்பாகப் பெண்களுக்குப் பெருமளவு அதிகாரமளிக்கும் இந்திய அரசியலமைப்பையும் நினைவுகூர்வது மிகவும் முக்கியமானது.

அரசியலமைப்பு எனக்குச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வழங்கியிருக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமானது சகோதரத்துவம். அதுவே என் புனிதமான அறம், என் பணி நெறி, என் வாழ்க்கை.

சுமார் 16 நாள்களுக்கு முன்பு என் கணவர் காலமானார். அவர் 60 ஆண்டுகளாக என் வாழ்க்கைத்துணையாக இருந்தார். நாங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். 16 நாள்களுக்கு முன்பு அவர் மறைந்தபோது, `நாங்கள் தினமும் கருத்து வேறுபாடுகளையும், மாறுபட்ட பார்வைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்தோம்’ என்று எழுதினேன்.

எங்கள் சிந்தனையைக் கூர்மைப்படுத்தவே அந்தக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. வாதங்களின் முடிவில் குறைகளை ஏற்றுக்கொண்டோம் அல்லது கருத்து வேறுபாட்டை ஏற்றுக்கொள்வோம்’’ என்றார் அருணா ராய்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User