இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சகஊழியர்கள்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது

Nov 25, 2026 - 10:31
0
இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சகஊழியர்கள்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது

டெல்லியில் உணவகம்(கேபே) ஒன்றில் பணிபுரியும் 22 வயது இளம் பெண் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவருடன் பிரீத் விகார் பகுதியில் இருக்கும் 'சல்டனேட் கேஃப்' (Saltanate Cafe) என்ற இடத்திற்குச் சென்றார்.

அங்கு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 8 பேர் பார்ட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில் அதிகமானோர் ஒன்றாக கேபேயில் வேலை செய்யக்கூடியவர்கள் ஆவர்.

பார்ட்டியில் அனைவரும் மது அருந்தினர். கேபே இரவு 11.30 மணிக்கு மூடப்பட்டுவிட்ட நிலையில் கேபேயை மீண்டும் திறந்து அவர்கள் தொடர்ந்து மது அருந்தி நடனமாடிக்கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் 22 வயது பெண்ணை அவருடன் நடனமாடிய இரண்டு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்தச் செயலுக்கு பார்ட்டியில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட சிலர் உதவியாக இருந்து உற்சாகப்படுத்தியுள்ளனர். அனைவரும் பார்ட்டியில் இருந்து அதிகாலை 3.30 மணிக்குச் சென்றனர். இது குறித்து அப்பெண் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் மீது போலீஸில் காலை 5.30 மணிக்குப் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பெண்கள் உட்பட 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்த நபர் அப்பெண்ணுடன் வேலை செய்யும் நபர்கள் ஆவர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். சமீபத்தில்தான் தனது ஆண் நண்பருடன் பூங்காவிற்குச் சென்ற இளம்பெண்ணை துப்பாக்கியைக் காட்டி சிலர் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User