``கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.!" - கார்த்தி சிதம்பரம்

Nov 25, 2026 - 12:01
0
``கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.!" - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம்

விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கார்த்தி சிதம்பரத்தை வரவேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

புத்தகம் வாங்க மறுப்பு

அப்போது அந்த புத்தகத்தை வாங்க மறுத்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., "தமிழகத்தில் புத்தகங்களின் நிலைமை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாததால் அதை வாங்க மாட்டேன். புத்தகத்தை படித்து பார்த்துவிட்டு, பரிசாக கொடுங்கள்" என்றார்.

கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்கு போலி புத்தகங்களை வழங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், கல்வி அலுவலர் கொடுத்த புத்தகத்தை அவர் வாங்க மறுத்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் பேட்டி

இதனைத்தொடர்ந்து, கட்டிக்குளத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

 ``கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கலெக்டர் புகார் கொடுத்துள்ளார். இதற்கு தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தில் தான் அதிக கோயில்கள் உள்ளன. ஒரு நாளைக்கு அதிக தேங்காய் உடைக்கிற மாநிலம் தமிழகம் தான். திருப்பரங்குன்றத்தில் புதிதாக ஒரு இடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று அரசியல் சாயம் பூசாமல் இருப்பது நல்லது.

 த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு தொடரும். இந்த 5 ஆண்டுகளும் எந்த மாற்றமும் வராது." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User