Aval Awards: ``ஒரு நடிகையாக பொறுப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" - நடிகை நிமிஷா சஜயன்
அவள் விகடனின் `பவர்ஃபுல் பெர்ஃபார்மர்’ விருதை நடிகை நிமிஷா சஜயனுக்கு, நடிகர் அதர்வா வழங்கினார்.
விருது பெற்ற பிறகு பேசிய நடிகை நிமிஷா சஜயன், ``விகடன் வாசகர்களுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்திலிருந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த விருதை என்னுடைய அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்தான் என்னுடைய ஆதரவு.
எனக்குப் பிடித்த கோ-ஸ்டாரிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எதையும் முன்கூட்டியே தயார் செய்ய மாட்டேன். என்னுடைய கதாபாத்திரங்களுக்கான முழுப் பெருமையும் இயக்குநர்களுக்குத்தான்.

என்னுடைய கதாபாத்திரங்கள் மக்களிடம் நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கும்.
எனக்குத் தோன்றுவது, சினிமா என்னுடைய தொழில். நான் போராட்டங்களில் ஈடுபடுவது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தது. ஒரு நடிகையாக நான் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்கிறேன்.
படத்தின் கதையைப் படித்தபோது, நானே ஃபோன் செய்து உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா என்று கேட்டேன். அந்தப் படத்திற்காக உடல் எடையை அதிகரித்தேன். ஆனால், உடல் எடையைக் குறைப்பது எளிதாக இருந்தது. ஏனென்றால், என்னை ட்ரெயின் செய்வதற்கு ஒரு நல்ல குழு இருந்தது" எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)