செஃப் தாமு: "தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமையல் முறைகளை உலகளவில் புகழ்பெற செய்தவர்" - வெங்கடேஷ் பட்

Oct 25, 2026 - 17:00
0
செஃப் தாமு: "தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமையல் முறைகளை உலகளவில் புகழ்பெற செய்தவர்" - வெங்கடேஷ் பட்

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சீசன் 4 வரை செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இணைந்தே நடுவராக இருந்து வந்தனர்.

இன்று காலை செஃப் தாமு காலமானதையடுத்து, வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “பத்மஸ்ரீ டாக்டர் செஃப் தாமு இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

கேட்டரிங் துறையிலும் இத்தகைய உன்னதப் புகழை அடைய முடியும், பத்மஸ்ரீ விருது வரை பெற முடியும் என்பதற்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவரே ஒரு தலைசிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமையல் கலை முறைகளை உலகளவில் புகழ்பெற செய்தவர்.

அவரோடு எனக்குப் பதினைந்து ஆண்டுகால நெகிழ்ச்சியான நட்பும், இணைந்து பணியாற்றிய அனுபவமும் இருந்தது.

அந்த நினைவுகள் என்றென்றும் பசுமையாக நிலைத்திருக்கும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை எந்தெந்த வழிகளில் எல்லாம் பெருமைப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு நாம் பெருமைப்படுத்த வேண்டும்.

அவருடைய நினைவுகள் எப்பொழுதும் நம்மிடையே நீங்காமல் இருக்கும். அவரோடு வாழ்ந்த காலம் மறக்க முடியாத பொன்னான நினைவுகளாக அமைந்தவை. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பேசியுள்ளார் வெங்கடேஷ் பட்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User