கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

Oct 25, 2026 - 20:00
0
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காந்திபுரம், ரயில் நிலையம், வின்சென்ட் சாலை, உக்கடம், சுங்கம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

லங்கா கார்னர் சந்திப்பு, அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள ரயில்வே பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அடியில் ஓர் அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மோட்டார் பம்புகளைக் கொண்டு மழை நீர் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வின்சென்ட் சாலை, புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதி, நஞ்சாண்டாபுரம், செளரிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

இதேபோல தொடர் மழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலும் வெள்ள நீர் தேங்கியது. மேலும் வெளிநோயாளிகள் வார்டு, ரத்த பரிசோதனை கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையாளருடன் அமைச்சர் சம்பத் குமார் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User