பெரம்பூர்: 53 அடி உயரம்; 3000க்கும் மேற்பட்ட பொம்மைகள்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொலு

Oct 25, 2026 - 08:00
0
பெரம்பூர்: 53 அடி உயரம்; 3000க்கும் மேற்பட்ட பொம்மைகள்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொலு

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த பிரமாண்ட நவராத்திரி கொண்டாட்டம், பாரம்பர்யத்தையும் கலைநயத்தையும் இணைத்து சென்னையின் கலாசார அடையாளமாக உருவெடுத்த சாதனை!

சென்னையின் நவராத்திரி கொண்டாட்டங்களில் புதிய மைல்கல்லாக, உலகின் மிக உயரமான கொலு காட்சியை அமைத்ததற்காக, பெரம்பூரில் உள்ள SPR சிட்டி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

SPR இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பிரமாண்டமான நவராத்திரி உற்சவம், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து, பாரம்பர்யக் கலாசாரத்தையும் நவீன நகர்ப்புற வாழ்க்கையையும் இணைக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.

கொலு
கொலு

53.8 அடி உயரத்தில் பிரமாண்ட கொலு!

அக்டோபர் 11 முதல் 20 வரை பத்து நாட்கள் நடைபெற்ற SPR சிட்டி நவராத்திரி உற்சவத்தின் முக்கிய ஈர்ப்பாக, 53.8 அடி உயரமும் 42 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான கொலு அமைந்திருந்தது. இதில் 3,750-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய் பொம்மைகள் நேர்த்தியாகப் படிக்கட்டு வடிவில் அடுக்கப்பட்டிருந்தன.

தமிழர்களின் பாரம்பர்யத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள கொலு வழக்கத்தை, பிரமாண்டமான அளவிலும் நுணுக்கமான கைவினைத்திறனுடனும் வெளிப்படுத்திய இந்த அமைப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தக் காட்சியின் உயரம் மற்றும் தனித்துவத்தை அங்கீகரித்த ஐக்கிய இராச்சியத்தின் உலக சாதனைப் புத்தகம், SPR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சாதனை அங்கீகாரத்தை வழங்கியது. இதன் மூலம் சென்னையின் நவராத்திரி கொண்டாட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

கொலு

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள்!

சாதனைப் படைத்த கொலுவைக் காண்பதற்காகச் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குடும்பங்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் SPR சிட்டியில் திரண்டனர். பத்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றது, மக்களிடையே பாரம்பர்யக் கலைகளுக்கும் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.

கொலுவைக் காண்பதுடன் மட்டுமல்லாமல், பூஜைகள், பக்திப் பாடல்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் விழாவின் ஒரு பகுதியாக இடம்பெற்றன. இதனால், நவராத்திரியின் ஆன்மிக சிறப்புகளை மக்கள் ஒரே இடத்தில் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

பாரம்பர்யத்தையும் சமூகப் பிணைப்பையும் இணைக்கும் முயற்சி!

தமிழகத்தில் நவராத்திரி கொலு என்பது வெறும் பொம்மைகளை அடுக்கி வைக்கும் நிகழ்வு மட்டுமல்ல. புராணக் கதைகள், தெய்வங்கள், நாட்டுப்புற வாழ்க்கை, கைவினைக் கலைகள் மற்றும் சமூகப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் கலாசார அடையாளமாகவும் விளங்குகிறது.

கொலு

SPR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், உலக சாதனைப் புத்தகத்தின் பட்டய அதிகாரி அங்கிதா ஷா, நிறுவனத்தின் வருவாய்த் துணைத் தலைவர் பிரகாஷ் மோகனசுந்தரம் மற்றும் விற்பனை, சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பாலகிருஷ்ண சந்திரசேகரன் ஆகியோருக்கு உலக சாதனைச் சான்றிதழை வழங்கும் நிகழ்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியுடன் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம்!

குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டமைப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மக்களை ஒன்றிணைக்கும் சமூக மற்றும் கலாசார அனுபவங்களையும் உருவாக்க முடியும் என்பதை SPR சிட்டியின் நவராத்திரி உற்சவம் வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகையும் சர்வதேச அங்கீகாரமும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பாரம்பரியக் கலைகளையும் சமூகக் கொண்டாட்டங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது. அந்த வகையில், உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த SPR சிட்டியின் பிரமாண்டக் கொலு, சென்னையின் கலாசாரப் பெருமையைப் பறைசாற்றும் முயற்சியாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User