"7வது முறையாக என்னை கொலை செய்ய முயற்சி" - திரிணாமுல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி மீது மீண்டும் தாக்குதல்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக இருக்கும் அபிஷேக் பானர்ஜி மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதுவும் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அபிஷேக் பானர்ஜி எங்கு சென்றாலும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பா.ஜ.க செய்வதாக அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் கோபத்தில் பொதுமக்களே இத்தாக்குதலில் ஈடுபடுவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தார்.
அந்நேரம் இன்று அதிகாலையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,''அதிகாலை 2 மணியளவில் எனது வீட்டிற்கு வெளியே பா.ஜ.க தொண்டர்கள் திருடன் என்று கோஷமிட்டபடி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது கல் மற்றும் செங்கல் வீசித்தாக்கினர்.

இதில் பலர் காயம் அடைந்தனர்''என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தாக்குதலுக்கு முன் இரண்டு நாட்களாக பாஜக தொண்டர்கள் எனது இல்லத்தில் உளவு பார்த்தனர். எனது பெயரைக் கொண்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை கிழித்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து கண்காணித்த பிறகு இன்று அதிகாலை 2 மணியளவில் பாஜக குண்டர்கள் என் வீட்டைத் தாக்கினர். கடந்த ஆறு மாதங்களில் என்னை கொலை செய்ய நடந்த ஏழாவது முயற்சி இது. போலீஸார் முன்னிலையில் வன்முறை நடந்தபோதிலும், போலீசார் தலையிடவில்லை. சில பா.ஜ.க ஆதரவாளர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் ரிவால்வர்களை எடுத்து வந்தனர்''என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)