``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை

Nov 10, 2026 - 10:30
0
``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி எம்.எல்.ஏ-வான ரவிசங்கரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது, கார்த்திக்குமாரை ரவி சங்கர், அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தாக்கப்பட்ட கார்த்திக்குமார் பேசிய மற்றொரு வீடியோ, நேற்று காலை வெளியானது. அந்த வீடியோவில் துணை சபாநாயகரும் உடனிருந்தார்.

எம்.எல்.ஏ ரவிசங்கர்
எம்.எல்.ஏ ரவிசங்கர்

அதில் பேசிய கார்த்திக்குமார், ``துணை சபாநாயகர் என்னைத் தாக்கவில்லை. வீடியோ திரித்து வெளியிடப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார். நேற்று மதியம் கார்த்திக்குமாரின் மற்றொரு வீடியோ வெளியானது. அதில் பேசிய அவர், ``துணை சபாநாயகர் ரவிசங்கர் என்னைத் தாக்கியது உண்மை. அப்படிச் சொல்லாவிட்டால், என்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டினர். அதனால், வீடியோவில் அப்படி பேசினேன்" என்று கூறியுள்ளார். அத்துடன் நேற்று மாலை அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வீ தி லீடர் அமைப்பின் தலைமைச் சேவகர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில்,``மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.

பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User