TVK: 'கமலி எனும் நான்'... பட்டதாரி; 28 வயதான இல்லத்தரசி இனி அமைச்சர் - யார் இந்த கமலி?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் பா.ஜ.க - வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் த.வெ.க வேட்பாளர் கமலி.
தி.மு.க- வின் இளம் வேட்பாளரான மருத்துவர் கோகிலா மணிக்கும் எல். முருகனுக்கும் தான் போட்டி என கணிக்கப்பட்ட நிலையில், அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை தனதாக்கிக் கொண்டார் கமலி. அவிநாசி தனி தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலி இன்றைக்கு தமிழ்நாட்டின் அமைச்சராக மகுடம் சூட இருக்கிறார்.

யார் இந்த கமலி?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கமலி பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 28 வயதே ஆன இல்லத்தரசியான இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
முதுகலை பட்டதாரியான இவருக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம் காரணமாக த.வெ.க- வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவிநாசி (தனி ) தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வாகை சூடினார். ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசனின் அமைச்சரவையில் இடம் பெற்று கவனத்தை ஈர்த்து வருகிறார்.!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)