``தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

Nov 01, 2026 - 21:00
0
``தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் போல, தமிழை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கும் ஒரு தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, ``இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கென தனிக்கொடி இருக்கிறது. அதுபோல தேசியக் கொடிக்கு இணையாக தமிழ்நாட்டின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒரு கொடி உருவாக்கப்பட வேண்டும். அந்த கொடியை ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்களில் தமிழக முதலமைச்சரின் கரங்களால் முதன்முறையாக ஏற்றி வைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அந்த கொடி தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும். ஆங்கில வழிக் கல்வியில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தை முதலில் மாற்ற வேண்டும். நமது குழந்தைகளுக்கு அன்னைத் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் தற்போதைய நிதர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை முதன்மைப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User