'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

May 21, 2026 - 10:30
0
'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 23 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். இந்நிலையில், தவெக அரசு சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையில் இப்போது வரை 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

விஜய்யுடன் லோகேஷ்
விஜய்யுடன் லோகேஷ்

தவெக தலைவர் விஜய் கடந்த மே 10 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவரோடு 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் எழும்பூர் தனி தொகுதியில் வென்ற ராஜ்மோகனும் ஒருவர். அவருக்கு பள்ளிக்கல்வி, செய்தி மக்கள் தொடர்பு, தமிழ் வளர்ச்சி போன்ற முக்கியமான இலாகாக்கள் வழங்கப்பட்டிருந்தது.

விஜய்
விஜய்

இந்நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் அமைச்சர் விரிவாக்க பட்டியலில் மேலும் 6 தலித் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவிநாசி தொகுதியில் கைக்குழந்தையோடு பிரசாரம் செய்து வென்ற ஆசிரியை கமலி அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். அதேமாதிரி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்து ராசிபுரத்தில் வென்றிருந்தார். அவரும் அமைச்சரவையில் இருக்கிறார்.

இதுபோக அரக்கோணம் தனி தொகுதியில் வென்ற காந்திராஜூக்கும் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் வென்ற மதன்ராஜூக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி தென்னரசுவும் அமைச்சரவையில் இருக்கிறார்.

விஜய்
விஜய்

காங்கிரஸ் சார்பில் மேலூர் பொது தொகுதியில் போட்டியிட்டு வென்ற தலித் எம்.எல்.ஏ விஸ்வநாதனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது.

மற்ற அரசுகளை விட தவெக அரசில் தலித்துக்களுக்கு அதிக முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுகிறது. இதுதான் சமூகநீதி என தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User