"அதனால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்" - சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஷால்!

Apr 23, 2026 - 16:32
 0
"அதனால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்" - சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஷால்!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள்.

TN Assembly Elections 2026
TN Assembly Elections 2026

அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலோடு கிடைக்கும் பேருந்துகளில் மக்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மதியம் 3 மணி நிலவரப்படி, 70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

நடிகர் விஷால் அவருடைய வாக்கைச் செலுத்துவதற்கு சைக்கிளில் வாக்குச்சாவடிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த 5 வருடங்களின் வாழ்வாதாரத்திற்கு இன்று முக்கியமான நாள். என்னுடைய வாக்கை நான் செலுத்திவிட்டேன். அனைத்து மாநிலங்களிலும் 80 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.

நம் மாநிலத்திலும் அதிகமாக வாக்குகள் பதிவாக வேண்டும். வாக்குச்சாவடிகள் கூட்டமாக இருந்தாலும், வெயில் அடித்தாலும் வந்து வாக்கைச் செலுத்துங்கள். இங்கு ஒவ்வொரு வாக்கும் ரொம்பவே முக்கியமானது" என்றவர், சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியதற்கான காரணத்தை விளக்கினார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

அவர், "சைக்கிளில் வருவது எனக்கு புதிதல்ல. நான் அதிகமாக சைக்கிள் ஓட்டுவேன். சைக்கிள் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். அரசியல்வாதிகள் அவங்க வேலையைச் செய்தால், நடிகர்கள் நடிகர்களாக இருப்போம்.

அவங்க வேலையைச் செய்யவில்லை என்பதால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இருக்கிறதா என்று கேட்டால் என்னுடைய பதில் 'இல்லை' என்பதாகவே இருக்கும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0