தமிழ்நாடு தேர்தலை நடத்தும் முதல் பெண் தலைமை அதிகாரி; யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். 
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் பெண் தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார் தலைமை தேர்தல் அர்ச்சனா பட்நாயக்.
யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
ஒடிசா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2002-ம் ஆண்டு பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். நீலகிரி மாவட்ட கலெக்டர், 1945- ம் ஆண்டிற்குப் பிறகான கோவை மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர், தமிழ்நாடு தோட்டக்கலை ஆணையர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து வந்துள்ளார்.
கடந்த 2024- ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தேர்தல் தலைமை அதிகாரி என்கிற சிறப்புடன் தேர்தலை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதிலும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களைக் கண்டறிந்து, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் எழாமல் தேர்தலை நடத்த கூடுதல் கவனம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0