"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

Aug 17, 2026 - 17:30
0
"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலடி தருவதுப்போல, ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எப்ராஹிம் அஜிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்...

ஈரான் பதிவு
ஈரான் பதிவு

"அமெரிக்க அதிபர், ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்து ஓயாமல் வாய் சவடால்கள் விடுப்பதை விட்டுவிட்டு, உணவு டிரக்கிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைமை வராதபடி தனக்கான பாதுகாப்பை உறுதியாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்"

துருக்கியில் நடந்த நேட்டோ மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிற்கு, ஈரானால் அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்ததால், அவர் திட்டமிட்ட விமானம் இல்லாமல் வேறு விமானத்தில் அமெரிக்காவிற்குப் பயணமானார்.

இடையில், அந்த விமானம் மாறுவதற்காக ட்ரம்ப் உணவு டிரக்கில் பயணித்தார் என்று கூறப்பட்டது. அதைக் குறிப்பிட்டுத்தான் ட்ரம்பைச் சாடியுள்ளது ஈரான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User