``வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" - கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

Nov 06, 2026 - 16:30
0
``வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" - கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) பிரிவிற்கு 'எக்ஸ்ட்ரா கார்போரியல் போட்டோபெரிசிஸ்' (Extracorporeal Photopheresis - ECP) என்ற அதிநவீன வெளிப்புற இரத்த ஒளி சிகிச்சை உபகரணம் புதிதாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இந்தியாவில் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் முதன்முறையாக இச்சிகிச்சை வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு உதவிகரமாய் இருந்த ரோட்டரி அமைப்பிற்கு அரசின் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.

Arun Raj TVK
அருண் ராஜ் | Arun Raj - TVK

மருத்துவர்கள் தற்காலிகமாக அவசரப் பணி மாறுதல் செய்யப்பட்டது, ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. விரைவில் அவர்கள் தங்கள் துறை சார்ந்த இடங்களிலேயே பணிபுரிய ஏற்பாடுகள் செய்யப்படும். அரசின் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 284 உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கான மருத்துவர்களை நியமிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

மத்திய உயர்நிலைக் குழுவுடனான சந்திப்பில் நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் என்பது ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட அமைச்சரையோ சார்ந்தது அல்ல, அது கூட்டுப் பொறுப்பாகும். தமிழக மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான கோரிக்கைகள் அக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளன.

VS Babu
வி.எஸ்.பாபு - VS Babu

மேலும், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை மீண்டும் ‘மாநிலப் பட்டியலுக்கு’ கொண்டு வருவதே இத்தகையப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது. சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்கிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது மருத்துவ நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User