கிங் படத்தில் காவி நிற உடையில் தீபிகா; "சனாதன தர்மத்தில் இதுபோல்.."- ஷாருக்கான் மீது பாஜக MLA புகார்

Nov 06, 2026 - 13:30
0
கிங் படத்தில் காவி நிற உடையில் தீபிகா; "சனாதன தர்மத்தில் இதுபோல்.."- ஷாருக்கான் மீது பாஜக MLA புகார்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கிங் படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் முதல் பாடலை ஷாருக்கான் தனது 61வது பிறந்தநாளில் வெளியிட்டார்.

இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான "து மில் ஜாயே" வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சையும் வெடித்து இருக்கிறது. இந்தப் பாடலில் தீபிகா படுகோன் ஆரஞ்சு நிற உடையில் ஷாருக் கானுடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க எம்.எல்.ஏ.ரவி நகி அளித்துள்ள பேட்டியில், ''ஷாருக்கான் ஜிஹாத்தில் ஈடுபடுகிறார். இந்த நாட்டில் பணம் சம்பாதித்துவிட்டு, நாட்டிற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்.

தீபிகா படுகோனை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுத்தி இருக்கிறார்.

எம்.எல்.ஏ.ரவி
எம்.எல்.ஏ.ரவி

தீபிகா படுகோன் ஒரு பகடைக்காய் மட்டுமே. இதற்குப் பின்னால் இந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள். நான் ஷாருக் கானை ஜிஹாதி என்றுதான் அழைப்பேன். நாங்கள் நம்பும் சனாதன தர்மத்தில், இதுபோன்ற உடைகளை அணிந்து கொண்டு ஆபாசமாக நடனமாடுகிறார்கள். இந்தக் காட்சியானது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு சதியாகும். இந்தக் காட்சி மாற்றப்படாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும்.

சனாதன தர்மத்திற்கு எதிரான எதையும் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நாங்கள் ஷாருக் கானை எச்சரிக்கிறோம். கிங் படத்தை நாடு முழுவதும் புறக்கணிப்போம்'' என்றார்.

சமீபத்தில் நடிகை தியா மிர்ஷா மும்பையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக வெளியிட்ட விழிப்புணர்வுப் பிரசார வீடியோ சமூக வலைத்தளத்தில் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ரவி, இது திட்டமிட்ட சதி என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User